ஆற்றங்கரையோரம்

August 25, 2009

கந்தசாமி திரைப்படத்தில் பின்நவீனத்துவம்

Filed under: அனுபவம்,சினிமா — meenaks @ 10:14 pm
Tags: , ,

Definitions are from wikipedia page on postmodern literature

-o0o-

(1)

நாயகனின் Superhero trademark ஆன‌ சேவல் வேடத்தை காமெடியன் வடிவேலுவுக்கு அந்தப் படத்திலேயே போட்டு சுய பகடி செய்தமை

-o0o-

(2)

தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரே

என்று “கற்பின் கனலி” கண்ணகி சிலப்பதிகாரத்தில் பேரும் ஊரும் சொல்லித் தன்னறிமுகம் செய்து கொன்ட பாணியில் வில்லனுக்காக இறுதிக் காட்சியில் “அழைத்து வரப்படும்” பொருட்பெண்டிர் வகைப்பெண் “என் பேரு மீனா குமாரி, என் ஊரு கன்யாகுமாரி” என்று பாடலாகவே அறிமுகம் செய்து கொள்வதில் தொக்கி நிற்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்த‌ Black Humour!

-o0o-

(3)

நாயகி ஷ்ரேயாவின் ஆடைகளில் achieve செய்யப்பட்ட‌ Minimalism 😉 (“Minimalism, the opposite of maximalism, is a representation of only the most basic and necessary pieces”)

-o0o-

(4)

அந்நியன், ரமணா, சிவாஜி, இன்ன பிற திரைப்படங்களிலிருந்து போலி செய்யப்பட்ட‌ காட்சிகள் புலப்படுத்தும் Intertextuality (“Interdependence of literaty texts based on the theory that a literary text is not an isolated phenomenon but is made up of a mosaic of quotations, and that any text is the ‘absorption and transformation of another’. One literary text depends on some other literary work.”)

-o0o-

(5)

பின்நவீனத்துவத்தை வளர்த்தெடுத்ததில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய‌ லத்தீன் அமெரிக்காவில் ஒரு நாடான மெக்ஸிக்கோவில் படத்தில் ஒரு பகுதியைக் களங்கொள்ளச் செய்து படம் பிடித்தமை

-o0o-

(6)

பறப்பது, தண்ணிர் மேல் நடப்பது போன்ற இறைச்செயல்களை நிகழ்-இயல்பு வாழ்வில் கயிறு வித்தைகள் மூலம் கொண்டு வந்ததில் காணும் மேஜிக்கல் ரியாலிஸம்

-o0o-

(7)

 யப்பா! முடியலை! snapjudge தொடருவாரா பார்க்கலாம்! (10hot-க்கு நல்ல சரக்கு!)

Advertisements

July 27, 2009

புதிய பிரம்மாண்டம் (Statue of Liberty)

அண்மையில் வந்த‌ ஜூலை 4 நீள்வாரயிறுதியில் நியூயார்க் சென்றிருந்தோம். புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையைக் கண்டு ரசித்தோம். அங்கே, எம்மா லாசரஸ் எழுதிய The New Colossus என்ற சானட் வகைக் கவிதையைக் கண்டேன். அதைத் தமிழாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன்.

Statue of Liberty, overlooking NewYork skyline

Statue of Liberty, overlooking NewYork skyline

 

புதிய பிரம்மாண்டம்

 வென்றெடுத்த‌ நிலங்கள்மேல் காலொன்றாய் வைத்து
அன்றுநின்ற கிரேக்கத்தின் பெரும்வீரன் போலல்ல;
கடல்கழுவிச் செல்லும் கதிர்மறையும் வாயிலில்
சுடரேந்தி நிற்கின்றாள் எங்கள் பெருமாட்டி;
தகதகக்கும் தீப்ப‌ந்தம் சிறைப்பட்ட மின்னல்,
அக‌திக‌ளின் தாயாக‌ நிலைகொண்டாள் எம்ம‌ண்ணில்.
வ‌ழிகாட்டும் ஒளிகூறும் உல‌கிற்கே வ‌ர‌வேற்பு,
விழி காட்டும் ஆணைகள் இருந‌க‌ர்க்க‌ரை அர‌சாளும்.
சொல்கின்றாள் ஒருசெய்தி வாய்திறந்து பேசாமல்:
“தொல்நில‌த்தீர்! பெருமைக‌ள், ப‌ழ‌ங்க‌தைக‌ள் உம்மோடே
கிட‌க்க‌ட்டும்! க‌ளைப்புற்று, ம‌ன‌ம்வாடித் துய‌ர்நிறைந்து,
விடுத‌லையின் வேட்கையினால் வெளியேறும் அனைவ‌ருக்கும்
இட‌முண்டு என்க‌ரையில், வ‌ர‌ச்சொல்லும், வ‌ர‌ச்சொல்லும்!
புய‌ல்த‌னிலே வ‌ழித‌வ‌றிக் க‌ரைமீளும் க‌திய‌ற்றோர்
அய‌னான‌ பொற்க‌த‌வு என்னொளியில் திற‌க்க‌க்காண்ப‌ர்!”

-o0o-

The New Colossus

By Emma Lazarus, 1883

Not like the brazen giant of Greek fame,
With conquering limbs astride from land to land;
Here at our sea-washed, sunset gates shall stand
A mighty woman with a torch, whose flame
Is the imprisoned lightning, and her name
Mother of Exiles. From her beacon-hand
Glows world-wide welcome; her mild eyes command
The air-bridged harbor that twin cities frame.
“Keep, ancient lands, your storied pomp!” cries she
With silent lips. “Give me your tired, your poor,
Your huddled masses yearning to breathe free,
The wretched refuse of your teeming shore.
Send these, the homeless, tempest-tost to me,
I lift my lamp beside the golden door!”

-o0o-

Note: மூலக் கவிதையின் முதலிரண்டு வரிகளும் தலைப்பும் குறிப்பிடுவது, Colossus of Rhodes  – ரோட்ஸ் தீவு நகரத்தின் கடற்கரை வாயிலில் கிரேக்கக் கடவுள் ஹீலியோஸுக்கு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட சிலையையாகும். இது உலகின் பழைய ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது.

June 22, 2009

உரையாடல் சிறுகதைப் போட்டி – கையறு நிலை

‘உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

-o0o-

கையறு நிலை

ரிடத்திலிருந்து வேறிடத்துக்குக் கல்லும் மணலும் அள்ளிச் சென்றோடும் ஒரு காட்டாறைப் போல ஆங்காரத்துடன் ஓடிக் கொண்டிருந்தது மின்தொடர் இரயில். இன்று அவர் எழும்பூரில் ஏறவில்லை என்பதைக் கொஞ்சம் கவலையோடு நினைத்துக் கொண்டேன்.

அவர் வெள்ளியன்று இறங்கும் போது சொல்லிவிட்டுப் போயிருந்த இறுதி வார்த்தைகள் நன்றாக ஞாபகம் இருந்தன. சுடுநீர்க்குழாயைத் திறந்து கைநீட்டி விட்டு திடீரென வெளிப்பட்ட வெப்பத்தில் பதறிப் பின்னிழுத்துக் கொண்டதைப் போல் இன்னும் மனம் நடுங்கிக் கொண்டு தான் இருந்தது.

சொல்லப்போனால் அன்றைக்குத் தான் அவர் முதன் முதலில் என்னிடம் பேசினார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீகளோ மாட்டீர்களோ? இரண்டு வருடமாக எனக்கும் அவருக்கும் பழக்கம். பழக்கம் என்று சொல்வதா, அறிமுகம் என்று சொல்வதா? தாம்பரத்திலிருக்கும் எங்கள் வங்கிக் கிளைக்கு என்னை மாற்றி விட்டதாக அறிவிப்பு வந்தபோது உற்சாகமளித்த ஒரு விஷயம் என்னவென்றால் இந்த இரயில் பயணம் தான். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து செல்வதில் எனக்கு ஒரு அலாதி பிரியம். மின்ட்டிலிருந்து ஒரு பஸ் பிடித்து சுருங்க பீச் ஸ்டேஷனுக்கு வந்து விட்டால் ஜன்னலோர இருக்கையொன்றைக் கைப்பற்றி விடலாம். தாம்பரத்தை அடையும் வரை அந்த இருக்கை என் சிம்மாசனம். “யாரங்கே?” என்று மானசீகமாகக் குரல் கொடுத்தால் சேடிப் பெண்கள் ஜன்னல் வழி இதமாக விசிறி விடுவார்கள்.

பீச்சிலிருந்து தாம்பரத்துக்குக் காலையிலும், மறு திசையில் மாலையிலும் பயணிப்பதில் ஒரு சௌகரியம் உண்டு. புறநகரிலிருந்து நகரின் மையப்பகுதிக்கு வருவதற்குத் தான் காலையில் கூட்டம் அலைமோதும். ஆற்று நீரில்  ஆங்காங்கே தென்படும் சுழலின் மையத்தை நோக்கி வேகவேகமாக மிதந்து வந்து மூழ்கிக் காணாமல் போகும் இலைகளையும் சருகுகளையும் போல. தாம்பரம் நோக்கிக் காலையில் செல்லும் கூட்டம் குறைவு.

என்றாலும் எழும்பூரில் ஏறும் அவருக்கு எப்போதாவது தான் சீட் கிடைக்கும். இரயிலின் பின்கோடியிலிருந்து இரண்டாவதாக வரும் பெட்டியில் தான் நான் எப்போதும் ஏறுவேன். பீச் ஸ்டேஷனில் படியிறங்கியவுடன் எதிர்ப்படும் அந்தப் பெட்டியின் வாயில் என்னை அப்படியே விழுங்கிக் கொள்ளும். ஜன்னலோர இருக்கையைத் தேடி நான் அமர்ந்த பிறகு, பையில் வைத்திருக்கும் ஏதேனும் ஒரு சிறு அல்லது நடு அல்லது பெரும்பத்திரிக்கை என்னை விழுங்கிக் கொள்ளும். இரயில் தாம்பரத்தை அடையும் வரை நான் அவ்வளவு நிமிர்ந்து பார்ப்பது கூட இல்லை. அதில் ஒரு மாற்றம் வந்தது அவர் எழும்பூரில் ஏறத் துவங்கிய பிறகு தான். அத்தனை கனிவும் சிநேகமும் நிரம்பிய முகத்தை நான் அதுவரை பார்த்திருக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு அப்புறம் கன்று பால் குடிக்க வரும்போது பசுவின் முகத்தில் தவழும் சாந்தத்தை அவர் முகத்திலும் கண்டேன். பெட்டியின் உள்ளே ஏறியதும் சுற்றிலும் பார்த்துப் பெருங்கருணையோடு அவர் வீசும் அந்தப் புன்னகையில், உலகமே நனைவதைப் போலிருக்கும்.

எதேச்சையாக ஒரு கடினமான கவிதையைப் படித்து முடித்து ஆழ்ந்த சிந்தனையோடு (அதாவது மண்டை காய்ந்து) நான் நிமிர்ந்த போது தான் அவரையும் அந்தப் புன்னகையையும் பார்க்க நேர்ந்தது. ‘இந்தக் கவிதை புரியலைன்னா விடு, இன்னொண்ணு படிச்சுக்கலாம்’ எனும்படியாக ஆறுதல் சொன்னது அவரது முகமும் சிரிப்பும். ஒரு மகரந்தம் நிகழ்ந்து, நானும் என் முகத்தில் கொஞ்சம் பூத்தேன்.

செம்புலப் பெயல் மழைநீர்போல என் அங்கீகாரம் அவரைக் குதூகலப்படுத்தியிருக்க வேண்டும். நன்றியுடன் தலையசைத்து கையுயர்த்தி மேலிருக்கும் கம்பியைப் பிடித்துக் கொண்டார். கறுப்பு நிறத்தில் பான்ட் போட்டிருந்தார். இன் பண்ணாமல் வெளியே விடப்பட்டிருந்த அவரது சட்டை, ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்தது என விற்ற கடைக்காரன் வந்து சாட்சி சொன்னால் நம்பலாம். நைந்து போன உடலைத் தாங்கிக் கொண்டிருந்தது இன்னும் நைந்து போகாத செருப்பு. என்னை விட சில ஆண்டுகளே மூத்தவராக இருக்கக் கூடும், ஆனால் என்னை விட பல ஆண்டுகள் மூத்தவர் போல் காலம் அவருக்கு மேக்கப் போட்டு விட்டிருந்தது.

அதன் பிறகு ஒவ்வொரு நாளும் எழும்பூரில் அவர் ஏறுவதைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவசரமாக ஏறி இருக்கை தேடி, கிடைக்காவிட்டால் எந்த ஏமாற்றமும் இல்லாமல் மின்விசிறியின் நேர் கீழாக ஓரிடத்தைப் பிடித்து நின்று கொள்வார். அபூர்வமாக உட்கார இடம் கிடைத்து விட்டாலும் என்னைக் கவனித்து, புன்னகைகளால் பரிமாறிக் கொள்ளும் எங்கள் பரஸ்பர குசல விசாரிப்பு முடியாமல் அமர மாட்டார்.

வழக்கமாக கிண்டியில் இறங்குபவர் அன்றொரு மழை நாளில் இறங்காமல் பிறருக்கு வழி விட்டு நின்றதைக் கண்டு கொஞ்சம் குழம்பிப் போனேன். குரலிழந்த ஒரு குயிலைப் போல பார்வைகளால் அவரது கவனத்தைப் பிடிக்க முயன்று பதறினேன். இரயில் கிண்டி நிலையத்தை விட்டு வெளியேறி வேகம் பிடித்த பிறகு தொலைந்த நினைவொன்று மீளக் கிடைத்தவர் போல அவசரமாக என் பக்கம் திரும்பி என் பதற்றத்தைக் கவனித்தார். அந்த மழைக் குளிரில் விவரிக்க முடியாத நட்புணர்வுடன் என்னை சாந்தப்படுத்துவது போல் கண்கள் மூடித் திறந்தார். ‘இனிமேல் இங்க இறங்க மாட்டேன், வேற ஸ்டேஷன்ல தான்’ என்று சைகையால் தெரிவித்தார். லேசாகத் திறந்திருந்த ஜன்னல் வழியாக என் மேல் தெளித்துச் சிதறியது சில்லென்று ஒரு மழைத் துளி.

-o0o-

சாயக் கழிவுகளால் மெல்ல மெல்ல நிறம் மாறும் ஒரு ஆற்றைப் போல அவரது முகத்தில் அந்த கருணையும் மலர்ச்சியும் படிப்படியாக வடிந்து வந்ததை நான் கவனிக்காமல் இல்லை. இப்போதெல்லாம் எழும்பூரில் ஏறியதும் என்னைப் பார்த்து ஒரு சின்னப் புன்னகை. பிறகு அவருக்குள் அவர் தொலைந்து போவார். குரோம்பேட்டையில் இறங்கும் வரை காற்று வீசாத பகல் நேரத்தின் மரம் போல எந்த அசைவுமின்றிக் கிடப்பார்.

போன வெள்ளிக்கிழமையன்று தான் முதல் முறையாக என் பக்கத்தில் இரண்டு இருக்கைகளுமே எழும்பூர் வரை காலியாக இருந்தன. உள்ளே ஏறியதுமே அதைக் கவனித்தவர், புவியீர்ப்பு விசையால் இழுக்கப்பட்டது போல் என்னருகே வேகமாக வந்தமர்ந்து கொண்டார்.

“சார் பேங்க் வேலைல இருக்கீங்க போல” என்றார்.

“ஆமா, உங்களுக்கு எப்படி..?”

“நீங்க கொண்டுக்கிட்டுப் போற பையில போட்டிருக்கே.. நல்லா இருக்கீங்களா சார்?”

“நல்லா இருக்கேன்.. நீங்க?”

“எங்க சார்? ஏதோ இருக்கேன். ஒங்களுக்குத் தெரியாதா, இப்போவெல்லாம் பொழப்புக்கு வழியத்துப் போய்த்தான கெடக்கோம். ஒலகம் பூரா அப்படித்தான் இருக்காமே?”

“உலகம் பூரா.. ஆமா.. கொஞ்சம் அப்படித்தான் இருக்கு.. நீங்க முன்னாடி கிண்டியில எறங்கிட்டு இருந்தீங்களே?”

“ஆமா சார், அங்க ஒரு லேத் சாப்புல வேல பாத்தேன். கொஞ்சம் ரெகுலரா ஆடர் வரும். கை நெறைய சம்பாதிச்சேன்னு சொல்ல முடியாட்டாலும் ஏதோ பொழப்பு ஓடிக்கிட்டு இருந்துச்சு. பெறவு கொஞ்சம் கொஞ்சமா எதும் இல்லாமப் போச்சு. பெறவு கரண்ட்டும் வராமப் போச்சு. மொதலாளியால சம்பளம் குடுக்க முடியல. எவ்வளவு நாள் தான் சம்பளமில்லாம அங்க இருக்க முடியும்? இப்போ குரோம்பேட்ல ஒரு சின்ன மெக்கானிக் சாப்ல வேலைக்கி சேர்ந்திட்டேன். வீட்டு வாடகைக்கே சரியா இருக்கு. கடன் தொல்லை சாஸ்தியாப் போச்சு, என்ன செய்ய?”

அவர் கண்களைப் பார்த்தேன். சிறு வயதில் உலகை வெல்லப் புறப்பட்ட ஒரு மன்னனின் கண்களைப் போல இளமையில் அவரது கண்களும் இருந்திருக்கக் கூடும். இப்போது முழுமையாய் ஒளியிழந்திருந்தன.

“போன வாரம் பாருங்க, என் மாமா பையனுக்குக் கல்யாணம். கடன் வாங்கிக் கூட செய்முற செய்ய முடியல. ரொம்பத் தலகுனிவாப் போச்சு.”

ஏதாவது சொல்லலாமா என்று நினைத்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரும் பேசாததால் நான் ஏதாவது சொல்லியே ஆக வேண்டியிருந்தது.

“நம்பிக்கையை விட்றாதீங்க. எல்லாம் நல்லபடியா மாறும்!” என்றேன், எனக்கே நம்பிக்கை இல்லாமல்.

“எங்க சார்?! நம்பிக்கை இருந்தாத்தான விடுறதுக்கும் புடிச்சு வக்கறதுக்கும்.. விதிப்படி நடக்கும் சார்..” என்றவர் என்னை நிமிர்ந்து பார்த்து, என் முகத்தில் தெரிந்த கவலையின் ரேகைகளைப் பார்த்து, “அய்யோ, மன்னிச்சிடுங்க சார், என்னமோ ஒங்களப் பார்த்த ஒடனே மனசில இருக்கறத சொல்லணும் போல இருந்திச்சி. அதான் பேசிட்டேன். மன்னிச்சிடுங்க.. இத எல்லாம் நெனச்சி நீங்க பீல் பண்ணாதீங்க. சார் ரொம்ப படிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். படிங்க சார்.” என்றார்.

“நீங்க பழையபடி சிரிச்ச முகமா இருந்தா நல்லா இருக்கும்.” என்றேன்.

அவர் ஒன்றும் பேசவில்லை. புன்னகைக்க முயற்சி செய்து தோற்றாரா அல்லது முயற்சி செய்யவில்லையா என்று தெரியவில்லை. நான் கையில் வைத்திருந்த பத்திரிக்கையில் ஆழ்ந்து கொண்டேன்.

இரயில்  கிண்டியைக் கடந்த போது எங்களுக்கிடையில் ஒலித்துக் கொண்டிருந்த அந்த மௌனம் என்னை அழுத்தத் துவங்கியது. படித்துக் கொண்டிருந்த சிறுகதையும் இருண்மையான உலகத்திற்குள் என்னை ஆழப் புதைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து விடுபடுவதற்காகவாவது அவர் ஏதேனும் பேச மாட்டாரா என்று எதிர்பார்த்தேன். பகலில் தொலைத்த பொருளை இரவின் இருட்டில் தேடியலைபவன் போல் எங்களுக்குள் ஓர் உரையாடலைப் பற்ற வைக்க தீப்பொறியைத் தேடியலைந்து கொண்டிருந்தேன். அவரோ கனவுகளில் எதையோ கண்டெடுத்து விட்டவர் போல கண்களை மூடி அமர்ந்திருந்தார்.

‘ஏதாவது பேசி விடு’ என்று என மனம் அரற்றிக் கொன்டிருந்தது.

இரயில் பல்லாவரத்தைக் கடந்து குரோம்பேட்டைக்கு முன் ஒரு சிக்னலில் நின்றிருந்தது.

சிக்னல் விழுந்ததும் ‘திடும்’ என ஒரு அதிர்வுடன் இரயில் மீண்டும் கிளம்பியது. நான் அவரைப் பார்த்தேன். ஒரு பெருமூச்சுடன் கண்களைத் திறந்து இறங்குவதற்குத் தயாராக இருக்கையின் ஓரத்திற்கு நகர்ந்தார். இரயில் மெதுவாகப் ப்ளாட்பாரத்தில் நுழைந்து கொண்டிருந்தது. ப்ரேக்கின் க்றீச்சிடல்களின் ஊடே என்னை நோக்கி குனிந்து, ஒரு இரகசியம் போல என் காதிலே சொன்னார்:

“என்ன பண்றதுன்னே தெரியல சார்! செத்துப் போயிரலாம்னு நெனக்கிறேன்.”

எழுந்து விறுவிறுவென நடந்து, இரயிலிலிருந்து இறங்கி, மனிதக் கூட்டத்திலே தொலைந்து போனார்.

காப்பி புராணம்

Filed under: அனுபவம் — meenaks @ 10:03 am
Tags: ,

(என் பழைய வலைப்பதிவிலிருந்து ஒரு மீள்பதிவு. எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது எழுதியது)

-o0o-

நீருக்குப் பிறகு உலகில் அதிகமாகப் பருகப்படும் பானம் என்று கருதப்படுகிறது காப்பி. காப்பிக் கொட்டைகளில் இருக்கும் கஃபீன் (caffiene) மூலம் கிடைக்கும் உற்சாக உணர்வு மற்றும் அதைத் தாங்கி வரும் பானத்தின் திடம் மற்றும் நறுமணம் ஆகிய மூன்றும் காப்பியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குக் காரணம் எனலாம்.

காப்பியின் வரலாறு எத்தியோப்பியாவில் கி.பி. 300-ல் வாழ்ந்த கல்டி (Kaldi) என்ற இடையர் வழியாகத் துவங்கியது என்பது பரவலான நம்பிக்கை. அவரது மந்தையைச் சேர்ந்த ஆடுகள், ஒரு செடியின் சிவப்பு கொட்டைகளை உண்ட பிறகு மாலை வரை மிகுந்த உற்சாகமாக இருப்பதைக் கண்ட கல்டி, தானும் அக்கொட்டைகளை உண்டு அதே உணர்வைப் பெற்றார். தன் ஊரில் வசித்து வந்த துறவிகளிடம் இதை அவர் கூறவே அவர்களும் இரவு நேரத்தில் தூங்காமல் இறை வழிபாடு செய்ய காப்பிக் கொட்டைகளை உண்ணத் துவங்கினர். தற்செயலாக, இக்கொட்டைகளை வறுத்து, பொடித்து, பானமாக்கிப் பருகினால் அதே உணர்வுடன் நல்ல சுவையும் கிடைப்பதைக் கண்டுபிடித்தனர். இப்படிப் போகிறது கதை.

அந்தக் காலத்தில் ஃபேரக்ஸ் (Farex) என்ற சத்துப் பொடி நம் நட்டில் புகழ் பெற்று விளங்கியது. சிறு வயதில் ஃபேரக்ஸை மிக விரும்பி உண்டு ஊட்டச்சத்துடன் வளர்ந்தவன் நான் என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். இன்றைய தேதியிலும் நான் கொழுகொழுவென இருப்பதற்கு ஃபேரக்ஸ் ஒரு அடிப்படைக் காரணம் :-). அதற்குப் பிறகு என்றைக்கு காப்பியின் ருசி எனக்குக் காண்பிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து தீவிரமான காப்பி ரசிகனாக நான் மாறி விட்டேன். கொஞ்சம் பரம்பரைக் காரணமும் இருந்திருக்கலாம். கிராமத்தில் பல்வேறு தொழில்கள் செய்து வந்த என் அப்பா வழித் தாத்தா, சில வருடங்கள் காப்பிக் கடையும் வைத்திருந்தார். அவர் காப்பி ஆற்றித் தரும் அழகே அழகு.

பள்ளிப் பருவம் வரை அம்மா தரும் காப்பி மட்டுமே பெரிதும் குடிக்கப்பட்டாலும், மாலை நேரங்களில் நண்பர்களோடு விளையாடப் போகையில் அவர்களின் வீட்டிலும் காப்பி குடித்தே வளர்ந்திருக்கிறேன். கப்களில் காப்பி குடிப்பதை விடவும் எவர்சில்வர் டம்ளர்களில் காப்பி குடிப்பது ருசிகர அனுபவம். கைகளில் அந்தச் சூடு பரவிய வண்ணம் இருக்க, சூடு ஆறுவதற்குள் காப்பியைக் குடித்து முடிப்பது சுகம். தலைவலிக்கு எளிய நிவாரணமாக, சூடான காப்பி நிரம்பிய எவெர்சில்வர் டம்ளர்களை இலேசாக நெற்றியில் தேய்த்து எடுப்பது எனக்கு நெடுநாள் பழக்கம். பயந்தோடிவிடும் எனது தலைவலி.

இவற்றையும் விட, கண்ணாடி க்ளாஸ்களில் தெருவோரக் கடைகளில் காப்பி குடிப்பது இன்னும் சுவாரஸ்யம். ‘ஸ்ட்ராங் காப்பி’ என்று ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து விட்டு நின்றால், மாஸ்டர் கொட்டையின் வடிநீரை எடுத்து பால் கலந்து அருமையான நிறத்திற்குக் கொண்டு வந்து, கடைசியில் கையில் கொடுக்கும் முன்னால் கொதிக்கும் பாத்திரத்தின் ஓரங்களிலிருந்து பால் நுரையை கொஞ்சமாய்க் கரண்டியில் அள்ளி டம்ளரில் மேலாக நிரப்பித் தருவாரே, அட்டகாசம் தான் போங்கள்.

காப்பியைக் குடிப்பதிலும், அதை உறிஞ்சி மிடறு மிடறாக உடனே விழுங்கி விடுவதில் எனக்கு சம்மதம் இல்லை. கொஞ்சம் டம்ளரிலிருந்து உறிஞ்சி எடுத்து வாய்க்குள் முழுமையாக நிரப்பி, நாக்கை அதில் ஒரு சுழற்று சுழற்றி, நாக்கின் சுவை மொட்டுகள் அனைத்தும் அதில் நனைந்து அந்த சுகத்தை ஒரு விநாடியாவது கண்மூடி அனுபவித்து விட்டு, அப்புறம் தொண்டையை நனைத்து உள்ளே விழுங்குவதே காப்பி குடிப்பதில் உள்ள நுட்பமான செயல்.

கல்லூரிக் காலங்களில் தினமும் மாலை மெஸ்ஸில் காப்பி இலவசமாக வழங்கப்படும். அனைவரும் மெஸ்ஸுக்கு வந்து தான் குடிக்க வேண்டும். இதனால் மதியம் ஆய்வக வகுப்பு (laboratory class) இருந்தால் அதில் பரிசோதனையை முடித்து விட்டு அவசர அவசரமாக ஓடி வந்து காப்பி குடிப்போம். கூடப் படிக்கும் அனைத்து பெண்களும் அப்படியே வந்து குடிப்பார்கள் என்பதால், கல்லூரிச் சாலை ஓரமாக நின்று காப்பி குடித்தபடியே தேவதை தரிசனம் காண்பது மிக அழகு. அப்போது கூட காப்பியின் இனிமைக்கு காட்சியின் இனிமை ஈடாகவில்லை என்பதே எனது அனுபவம். (சும்மாவா சொன்னார்கள் ஒரு நகைச்சுவை வாசகம்: 99% of the girls in the world are beautiful, the remaining 1% are studying / studied engineering with me.)

வேலைக்குப் போகத் துவங்கிய பிறகு தான் காஃபி டே (Cafe Coffee Day), க்விக்கிஸ் (Qwikys), பாரிஸ்டா (Barista) போன்ற காப்பி சங்கிலிக் கடைகளின் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. ஆற அமர உட்கார்ந்து சாப்பிட வசதியாக குளிர்ந்த காப்பிகளும் எனக்கு அறிமுகமாயின. மோசமில்லை என்றாலும் சூடான காப்பியின் இனிமையை அவற்றால் ஈடு செய்ய முடியவில்லை என்பதே எனது தீர்ப்பு. வெவ்வேறு விதமான காப்பிகளை அங்கே ருசி பார்த்திருக்கிறேன். குறிப்பாக பெங்களூரில் க்ராஸ்வேர்ட் (Crossword) என்ற புத்தகக் கடை உள்ளேயே ஒரு காஃபி டே இருக்கும். புத்தகங்களை வாங்கி விட்டு, அங்கு அமர்ந்து காப்பி குடித்தபடி புத்தகங்களை வாசிக்கத் துவங்கி விடுவது எனது வழக்கம்.

பெங்களூர் கோரமங்கலாவில் நான் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் காஃபி வேர்ல்ட் (Coffee World) என்ற புதிய கடை துவங்கப் பட்ட போது மிக மகிழ்ந்தேன். இரவுகளில் சினிமா பாரடைஸோ வரை நடந்தே சென்று டி.வி.டி.க்கள் எடுத்து வரும் வழியில் அங்கே நுழைந்து காப்பி குடித்து வருவது எனது வாடிக்கை. காஃபி வேர்ல்ட், பெங்களூர்வாசிகளுக்கு நான் சிபாரிசு செய்யும் நிறுவனம்.

இப்போது சென்னை திரும்பி விட்ட பிறகு எங்கள் பகுதியின் மாஸ்டர் கடையில் தான் வழக்கமாக காப்பி குடிக்கும் வழக்கம். காலை நடைபயிற்சி முடித்துத் திரும்பி வரும் போது ஆறு மணிக்குக் கடை திறக்கப்பட்டதும் முதல் வாடிக்கையாளர் நானே. தவிர மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிவதால் பணியிலும் ஒரு நாளுக்கு மூன்று முதல் நான்கு வரை தானியங்கி இயந்திரத்தின் காப்பி குடிப்பது வாடிக்கை. அமெரிக்க க்ளையண்ட்களுடன் conference call முடித்து அவசியம் ஒரு காப்பியாவது தேவைப்படுகிறது என்பது எனது அனுபவம்.

காப்பிக் கொட்டைகளின் ருசிக்கு அவை வளரும் மண்ணும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க் பிரதேசத்திற்கு அலுவல் காரணமாகப் போயிருந்தபோது நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து காவிரி ஆறு வரை ஒரு trekking போனோம். அப்போது வழியெங்கு காப்பித் தோட்டங்கள் மிக ரம்மியமாக இருந்தன. அங்கு வளர்ந்த காப்பிக் கொட்டைகளிலிருந்து தயார் செய்யப்பட்ட காப்பி வித்தியாசமான சுவையோடு தான் இருந்தது.

சென்ற ஆண்டு திண்ணை இதழும், மரத்தடி குழுவும் நடத்திய அறிவியல் புனைகதை போட்டிக்கு நான் எழுதி அனுப்பிய கதையில், எதிர்காலத்தில் காப்பிக் கடைகள் எப்படி வடிவம் பெறும் என்பதில் எனது கற்பனையை இந்த பிரத்தியேக மண் சார்ந்த சுவை என்ற சமாசாரத்தில் புகுத்தியிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதி (எதிர்காலம் என்று ஒன்று என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற கதை):

அந்த இளைஞன் மறு வாசல் வழியாக இறங்கிக் கொண்டிருந்தான். நேராக நடந்து காஃபி-டே’ கடையில் போய் நின்றான். “ஒரு மைசூர் காஃபி” என்றான்.

கடையிலிருந்த பணியாளர் “நல்ல தேர்வு” என்று சொல்லிப் புன்னகைத்து விட்டு, தனக்கு முன்னாலிருந்த சிறிய ஃப்ரிட்ஜ் அளவிலான மெஷினை ஆன் செய்தார். ‘மைசூர்’ என்று எழுதியிருந்த பெட்டியிலிருந்து ஒரு பெரிய கரண்டியால் மண் எடுத்து மெஷினுக்குள் போட்டார். ஒரு விதையை உள்ளே போட்டு, பிறகு தண்ணீருக்கான பச்சை பொத்தானை அழுத்தினார். தண்ணீர் மெஷினுக்குள் வழிந்து மண்ணை நனைத்தது. சற்று நேரத்தில் கண்ணெதிரில் அந்த மாயம் நிகழ்ந்தது. ஒரு காப்பிச் செடி மெஷினுக்குள் முளை விட்டு வளர்ந்து, பச்சை நிறத்தில் எல்லிப்டிகல் இலைகளை உருவாக்கிக் கொண்டு, பூக்கள் மலர்ந்து, கொட்டைகள் ஏற்படுத்தி, அவை பச்சையிலிருந்து சிகப்பும் பிரவுனும் கலந்த நிறத்துக்கு மாறின. ஒரு ரோபோ கரம் எங்கிருந்தோ முளைத்து வந்து தகுதியான கொட்டைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பறித்தது. பறித்த காஃபி கொட்டைகளை அரவைக்குள் அனுப்பி அரைத்து, ஃப்ளேவர் சேர்த்து கொதிக்கும் பாலில் கலந்து ஒரு கோப்பையில் நிரப்பி வெளியே அனுப்பி வைத்தது. இரண்டு நிமிடங்களில் சுவையான ‘லொக்கேஷன் காஃபி’ தயார்.

அவன் பணம் கொடுத்து விட்டு கோப்பையை எடுத்து பருகி, “எத்தனை முறை இதைப் பார்த்தாலும் சலிப்பதேயில்லை” என்றான்.

பணியாளர் சில்லறையைக் கொடுத்து, “உண்மை தான். சிறியவர், பெரியவர் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இது பிடித்திருக்கிறது. எங்கள் சேவையைப் பயன்படுத்தியதற்கு மிக்க நன்றி” என்றார்.

காப்பியைப் பற்றி நான் படித்த மிகச் சிறந்த வர்ணனை, ப்ரெஞ்சு அறிஞர் டாலிரேண்ட் (Talleyrand) கூறியதே ஆகும். அவரது வர்ணனை: “Black as the devil, hot as hell, pure as an angel, sweet as love.” என்னை போலவே அவரும் ஒரு சிறந்த ரசிகராய் இருந்திருக்க வேண்டும்.

அது சரி, இப்போது எதற்கு திடீரென்று இந்த நீளமான காப்பி புராணம் என்று தானே கேட்கிறீர்கள்? என்ன தான் சுவையாக இருந்தாலும், இத்தனை காப்பி குடித்தால் உடலுக்குக் கேடு என்று கட்டிக்கப் போகிற பெண் சொன்னதால் அண்மையில் சென்ற வாரத்திலிருந்து என் உயிரினும் மேலான, என் ரத்தத்தின் ரத்தமான, என்னை வாழ வைக்கும் தெய்வமான என் அருமைக் காப்பியை நான் துறந்து விட்டேன். காப்பி என்பது ஒரு பானமல்ல, அது ஒரு இனிமையான ஞாபகம் என்று சொல்பவர்கள் உண்டு. என்னளவில் அது உண்மையாகி விட்டது. அதன் இனிமையான நினைவுகள் எப்போதும் என் நெஞ்சாங்கூட்டில் அலைந்து கொண்டே இருக்கும்.

பின் குறிப்பு:

“உனக்காக நான் காப்பியை தியாகம் செய்தேனே, நீ எனக்காக என்ன தியாகப் செய்யப் போகிறாய்?” என்று கேட்டேன்.

அதற்கு வந்த பதில் – “உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே பெரிய தியாகம் தானே, அதுக்கு மேல‌ என்ன தியாகம் செய்யணும்?”

ஹூம், என்னவோ போங்க.

June 21, 2009

சில வெண்பா(ம்)கள்

அண்மையில் வேறு தளங்களில் எழுதிய சில‌ வெண்பா(ம்)கள், இங்கே சேமிப்புக்கு மட்டும்!

-o0o-

ட்விட்டரில் எழுதியவை:

About the Deal Or No Deal TV program —

டீலா அல்லது நோ-டீலா எனக்கேட்கும்
பீலா நிகழ்ச்சியைப் பாரீர் – லாலா
கடையல்வா வைப்போல் அரைமில்லியன் டால‌ர்கள்
கிடைத்தவன் அள்ளிச்சென் றான்!

தூக்கம் வராமல் வெண்பாம் இயற்றினால்
காக்கும் கடவுளுக்கும் பொறுக்காதே – வீக்கம்
வரும்படி தர்மஅடி வாங்குகின்ற‌ அள‌வுக்கு
விருப்ப‌ம் இல்லையே என‌க்கு

எலைட்என்று எமைச்சொல்லி இன்புற்று மகிழ்வதில்
டிலைட்என்ன உமக்கு நண்பரே – தளைதட்டும்
வெண்பாக்கள் ஒன்றிரண்டு எழுதுகிறேன் பரிவோடு
பண்பாக நடந்து கொள்ளும்

On inviting Priya Raju to join the fun —

வருகவென பிரியாவை சிரம்தாழ்த்தி வரவேற்று
த‌ருக உம்வெண்பாமை என்றேன் – உருகாதா
ப‌டிப்பவ‌ர்கள் ம‌ன‌மெல்லாம் உம்க‌வியைக் க‌ண்டு
இடிம‌ழையாய் க‌விதை பொழி

Response to a day time tweet invitation to compose venpaa —

ரெடியா ஆட்டத்துக்கு என்றழைக்கும் நண்பா
படிதாண்டி அலுவலகம் வந்தபின்னே – துடியாக‌
அதிலேதான் என்கவனம் என்செய்ய வாழ்வதற்கு
நிதியளிப்பது அதுவல்ல வோ!

உருவத்தில் குண்டு என்றுதான் இதுவரை
பருவத்தில் என்னைப் பலர்சொல்வார் – புருவத்தை
உயர்த்தி வெடிகுண்டா, நானா என்று
அயர்ந்து போனேன் நான்

On why Chokkan is missing in the play —

மீனாட்சி வந்தபின்பு சொக்கரும் வருவாரே 😉
தானாக நடக்கும் எல்லாம் – நானாக‌
அழைக்கவா, அல்லது பார்த்துவிட்டுப் போகட்டும்
பிழைப்பை எனவிட வா?

விதிவலியது என்றுநான் கண்டடைந்தேன் இன்று
மதியினால் வெல்லவா முடியும் – சதிகார‌
சகட்வீட்டர் வெண்பாம் விளையாடும் வெளியில்
முகம்காட்ட வந்தது தவறு

-o0o-

அமெரிக்க வாழ்க்கை பற்றி அண்மையில் எழுதியவை:

(1) Longing for the Long Weekend 

லாங்க்வீக்கெண்ட் வந்தாலே ஆன்சைட்டின் தேசீக்கள்
ஆங்காங்கே சென்றுவர‌ ப்ளான்செய்வார் – பாங்காக‌
“டீல்”தேடி முடித்திடுவார், நாளிருப்பின் போய்வருவார்
பால்வீதி மண்டலமும் தான்!

(2) Burger King, Burger Queen, Burger Prince and Burger Princess 

“பர்கர்தான் சாப்பிடணும்” பிள்ளைகள் அடம்பிடிக்க‌
தர்க்கங்கள் செய்யாமல் சென்றோம் – சிக்கனாம்
பெண்ணுக்கு, வெஜ்ஜி மகனுக்கு, எங்களுக்கோ
கண்,மனம் நிறைந்தது பார்த்து.

(3) Credit History

கடன்வாங்கல் என்றாலே கணக்குத்தான் என்றிருந்தேன்
முடையான நாட்களிலே பெற்றுவந்தேன் – அடமடையா!
கணக்கு மட்டுமல்ல, கடனென்றால் “வரலாறும்”
பிணக்கின்றி இருத்தல் தலை. 

(4) A ticket to discipline

தேரோட்டத் தோதான வீதிகளிலே சிறுபெட்டியாய்
காரோட்டிச் செல்கின்றார் எல்லோரும் – பாராட்டிப்
பண்பாடலாம் “டிக்கெட்” பயத்தினிலே விதிமதித்து
பண்பாகவே பயணிக்கிற தால்!

June 20, 2009

மேடிசன் மெட்ரோ பஸ்

Maidson Metro Bus

Madison Metro Bus

மேடிசன் (Madison) நகரில் சிறப்பான பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளது. இங்கு வந்த பிறகு கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகத்துக்குப் பேருந்தில் தான் சென்று வருகிறேன். சென்னைப் பேருந்து அனுபவத்திலிருந்து பெருத்த மாற்றம். சில அத்தியாவசியக் குறிப்புகள்:

1. பெரும்பாலும் காலை எட்டு மணி பேருந்தைப் பிடித்து விடுவேன். என்னையும் சேர்த்து பேருந்தில் மொத்தம் ஐந்து பேர். (இரண்டு மாதங்களில் இதுவரை ஒரு முறை கூட இருவர் அமரக் கூடிய இருக்கைகளில் நான் இன்னொருவருடன் அதைப் பகிர்ந்து கொள்ளும்படி நேரவேயில்லை!) பேருந்தின் ஓட்டுனர் ஒரு உற்சாகப் பேர்வழி. ஏறும் போதே அன்றைய நாளைப் பொறுத்து, “இனிய திங்கட்கிழமை வாழ்த்துகள்”, “இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துகள்” என்று அழகாய் முகமன் கூறி வரவேற்பார். ஒவ்வொரு நாளுக்கும் இனிய தொடக்கம்!

2. சில சமயம் பேருந்து ஒட்டுனர்கள் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் convenience storeகள் இருக்குமானால் அங்கு பேருந்தை ஒரு ஐந்து நிமிடங்களுக்கு நிறுத்தி விட்டு கடைக்குள்ளே போய் காப்பி அல்லது வேறு ஏதேனும் தின்பண்டம் வாங்கி வருவதைப் பார்த்து வியப்பாக இருக்கிறது. அதுவரை பயணிகள் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சில சமயம் வழியில் உள்ள பரோட்டா ஸ்டால்களில் இப்படிப் பேருந்து ஓட்டுனர்கள் நிறுத்தி பார்சல்கள் வாங்குவதைப் பார்த்திருக்கிறேன் (குறிப்பாக mofussil ரூட்களில்!) ஆனால் அங்கு கூட இப்படி ஐந்து நிமிடம்வரை நிறுத்திக் கொண்டிருப்பதில்லை. ஒரு வேளை இங்கு நேரத்தை சரியாகக் கடைப்பிடிப்பதால் சில சமயம் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வண்டி சென்று கொண்டிருந்தால் இப்படி ஆங்காங்கு நிறுத்தி அதை சரி செய்கிறார்கள் போலும்!

3. அட, இப்படி தாகத்துக்கு காப்பித்தண்ணி வாங்கிக் கொண்டால் கூட பரவாயில்லை. ஒரு நாள் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு ஐந்து நிமிடம் கழித்து வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு ஓட்டுனர் வந்த போது ‘கொஞ்சம் ஓவரோ?’ என்று நினைக்கத் தோன்றியது. 🙂

4. இங்குள்ள பேருந்துகளில் கவனிக்கத்தக்க ஒரு மாற்றம், நடத்துனர்கள் இல்லாதது. தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்னால் ஒருவர் பெங்களூரில் நடத்துனராக இருந்தார் என்ற வகையில் நடத்துனர்கள் மேல் எனக்கொரு தனித்த பிரியம் உண்டு. இங்கு அவர்களைக் காணாததில் ஏமாற்றமே. பேருந்தில் ஏறும் போது அங்குள்ள டிக்கெட் இயந்திரத்தில் சரியான சில்லறையை உள்ளிட்டு விட்டு, தேவையான பணத்தை செலுத்திவிட்டோமா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அது தரும் ‘பீப்’ ஒலியைக் கேட்டு விட்டு உள்ளே போய் உட்கார வேண்டியது தான். இயந்திரமோ அல்லது ஓட்டுனரோ பாக்கி சில்லறை தருவதில்லை என்பது கவனிக்க வேண்டிய செய்தி.

5. அல்லது என்னைப் போல ஒரு மாத காலத்துக்குப் பயன்படுத்தக் கூடிய பாஸ்களும் வாங்கிக் கொள்ளலாம். 31 நாட்களில் எத்தனை முறை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். (மதிய உணவுக்கு இப்போதெல்லாம் வீட்டுக்கு வந்து செல்கிறேன் நான்!) சல்லிசான கட்டணம்.

6. நாம் இறங்க வேண்டிய நிறுத்தத்துக்கு சற்று முன்பாக அதைப் பற்றி ஓட்டுனருக்கு சமிக்ஞை அளிக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு. ஒவ்வொரு இருக்கைக்குப் பக்கத்திலும் இதற்காக சமிக்ஞைக் கம்பிகள் உண்டு. அதைப் பிடித்து இழுத்தால் நிறுத்தக் கோரிக்கை உயிர்பெற்று ஒளிரும். ஓட்டுனரும் அங்கு நிறுத்துவார். இல்லையென்றால் ‘ரைட் ரைட்’ என்று போய்க் கொண்டே இருப்பார். (வாசித்துக் கொன்டிருக்கும் புத்தகத்தின் சுவாரஸ்யத்தில் ஓரிரு முறைகள் என் நிறுத்தத்தை நான் தவற விட்டுள்ளேன்!) வண்டி முழுமையாக நின்ற பிறகு தான் இங்கு அனைவரும் இருக்கையை விட்டு எழுந்து வாயிலுக்கு நகர்கிறார்கள். சென்னையில் நிறுத்தத்துக்கு முன்பிருந்தே நடத்துனர் தொண்டைத் தண்ணீர் வற்ற ‘இறங்கறவங்க எல்லாம் ரெடியாகிக்கோங்க’ என்று கத்தித் தீர்ப்பது போல் இங்கில்லை. அனைவரும் இறங்கும் வரை ஓட்டுனர் பொறுமை காக்கிறார்.

7. நடத்துனர்களால் அன்பொழுக ‘சாவு கிராக்கி’ என்றோ ‘மேல ஏறி வா’ என்றோ ‘வூட்ல சொல்லிக்கினு வன்ட்டியா’ என்றோ வையப்படுவதும் எச்சரிக்கப்படுவதும் இல்லாமல் பேருந்தில் செல்வது, எதையோ இழந்தது போன்ற கையறுநிலையை ஏற்படுத்துகிறது.

8. சென்னைப் பேருந்துப் பயணத்தில் எனக்குப் பிடித்தமான அம்சம், காற்று வாங்கியபடி செல்லும் ஜன்னலோரப் பயணம். இங்கு பெரும்பாலும் ஜன்னல்களைத் திறக்க முடிவதில்லை. அதுவும் ஓர் இழப்புத்தான். என்னதான் அவ்வப்போது குளிர்சாதனம் இயக்கப்பட்டாலும், தலையைத் தடவிச் செல்லும் தென்றல் காற்று தரும் சுகம் அதில் இல்லை.

9. நகரின் ஐந்து முக்கிய பகுதிகளில் பேருந்து நிலையம் வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து மற்ற இடஙக்ளுக்கு பஸ் ரூட்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பேருந்து நிலையத்திலிருந்து இன்னொரு பேருந்து நிலையத்திற்கு இணைப்பு ரூட்கள் உண்டு. எனக்கு மதுரைப் பேருந்து அமைப்புத்தான் நினைவுக்கு வந்தது.

10. சில சமயங்களில் ஏழரை மணிப் பேருந்தில் செல்லும் போது அதில் நான் மட்டும் தான் பயணியாய் இருப்பேன். முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது பழகி விட்டது. என்னையும் இறக்கி விட்ட பிறகு அந்த ஓட்டுனரின் மனநிலை எப்படி இருக்கும் என்று சில சமயம் சிந்தித்துப் பார்ப்பேன். கவிதை எழுதலாமா என்றிருக்கும். 😉 அஞ்சற்க, எழுத மாட்டேன்!

June 6, 2009

Short story – Close Encounters of a Forgotten Kind

Filed under: short stories — meenaks @ 9:23 am
Tags: , , , , ,

We were waiting near Gate C15 of Frankfurt International Airport, Terminal 1. Our flight to Chicago was scheduled to leave at 10:45 AM local time. “We” comprises of myself and two babies with me. 2 years old Shreya was sleeping on my lap (her favourite place on earth, according to her own confession, extracted without the use of ice creams or chocolates), perhaps finally exhausted after continuously watching the kids videos/films on the in-flight entertainment program in her TV screen in LH 759 from Chennai to Frankfurt.

27 years old Abirami, the other baby I talked about, was sleeping as well, but she was sitting right next to me, and rested her head on my shoulders. Yeah, I know, the “baby” part does sound weird in her case, and frankly between you and me, she looks quite the ‘babe’ most of the time. But some times, I have the hardest time deciding who is the babiest of the two women in my life. Wasn’t that Vairamuthu who said it so perfectly: ‘நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய், வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்’ (When you try to bathe me, you are my mom; when you try to be naughty, you are my child!). Abi is certainly that type.

Hey, but don’t blame me, I am only responsible for the making of one of those babies.

We were going back to Chicago after our biennial vacation in India. Shreya was probably bringing back a few new memories of a country she doesn’t understand, but needs to connect with soon; Abi and me were bringing back a lot of pictures of the new-born kids of our relatives, CDs of the marriages in the family we couldn’t attend, and most importantly, a lot of home-made masala powders. 

I was reading Aadhavan’s En peyar Ramaseshan for the nth time, while simultaneously patting Shreya on her tummy ever so gently. I was also generally observing the scene unfolding around me that morning. That elderly lady was definitely going to either her daughter’s or son’s home in the US. Looks like her first time. And those kids clearly are American Born Confident Desi kids, creating such a racket, with their father proudly recording all their movements in his camcorder. There is an European – possibly Finnish – businessman going through a presentation in his laptop. Perhaps he will be talking to some investors tomorrow in the US. Few software engineers going on their onsite trip. You can always tell them by their dress. And that Indian couple looked very newly married. They reminded me strongly of my first trip with Abi to Chicago three years ago. She was exactly like that wife, looking around everywhere with interest and attention and curiosity. Of course, that feeling of wonderment changed quickly when Abi started working in the US. After a year she took a break when we were expecting Shreya. And now I suspect she has become too lazy to go back to work. Anyway, it appears as if Shreya has inherited all the naughty genes of her mother, so one of us needs to stay with her at all times.  

I looked at Abi. She was smiling in her sleep as she always does. Must have remembered something Shreya did or said. I transfered the book to my other hand, and moved a few strands of hair away from her pretty face. I was feeling thirsty, and there was a Coke vending machine right in front, but I didn’t want to disturb either of their sleep. I went back to Ramsesh and his pursuit of Prema in the novel.

Abi woke up with a start when the voice-announcement informed us about the departure of a NewYork bound flight from Terminal 2. She looked confused for a moment about her whereabouts, but then regained realisation quickly. She smiled at me.

“When will we be boarding?”

“May be in an hour.”

“Are you feeling thirsty?”

What?! How are wives able to underdstand us men with just the briefest of looks, whereas we spend a lifetime and still end up unable to figure them out?

“Yeah, I didn’t want to wake either of you up, so.. can you get me a Diet Coke from there?”

She arranged her hair quickly and stood up. She walked to the vending machine, inserted a Euro note, pressed a button and waited for the machine to deliver the requested item. She picked it up, and turned back. Then she stopped dead in her tracks as if she had seen a ghost.

I studied the sudden change in her expression with interest. She was trying to hide surprise and some kid of irritation. Like she was remembering something from the past, a bolt from the blue. She walked back slowly, sat near me and said, “Shit!”

“What happened Abi darling?”

“Nothing.” The way she said that indicated there was in fact something. But you see, I know a thing or two about Abi. I waited. She started speaking after a minute, as I expected.

“Do you see that guy in the blue jerkin?”

It was the husband from the newly married Indian couple I had observed earlier.

“Yeah!”

“He was my batchmate in engineering. I’ve told you about him.”

“Who exactly..?”

She was silent for a few moments.

“uh.. the love letter..”

Sudden realization dawned upon me.

“Oh! Our dear Mr. Raghav! Raghav Narayanan, if I remember correctly.”

“Yup, the same.”

When we were expecting Shreya, during the advanced months of Abi’s pregnancy, we would go to the Millennium Park in Chicago almost daily in the evenings, taking long walks there as recommended for Abi by our OB/GYN. We would then sit in front of the Crown fountain and talk about our past, and about our future. About our parents, our sisters, our friends, about the yet-to-be-born daughter who would be our greatest treasure.

And during one such conversation, we started talking about our student days in college. (We had of course spoken about all that during the many hours spent in sharing sweet nothings during the “official loving period” we had after our engagement, but not in terms of minute specifics.) I told her about my days in REC Trichy, about the students from other states, especially that girl in my batch from Kashmir whom we called the ‘Kashmir apple’. About the laboratory practicals where I was always clueless, especially those that involved plugging wires and resistors and capacitors and ICs into circuit boards. About our culfest. About our regular trips to uchchi piLLaiyaar temple, not necessarily to see the God, but to see the angels.

And she would say everything about her days in PSG Tech, Coimbatore. Her professors. Her hostel life for the first time. Her room mates. Her trips to Ooty and Kerala with friends. And about Raghav and the famous love letter. Raghav was her batchmate but from a different department. They had interacted few times while organizing some events, and it had never crossed significantly beyond “Hi” and “Bye” and “Thank You” and “You’re Welcome”. It stood at a pretty decent friendship level. But suddenly in the third year he proposed to her with a love letter, full of grammatically incorrect Tamil poetry. She even remembered some of the lines, which I found quite corny, and I also had a feeling it was “inspired” by some film songs I have heard. But hey, what else do you expect from 20-year-olds? She rejected the proposal on the spot, not because she had strong feelings about Tamil grammar, but because, as she said, she didn’t find anything interesting about him. ‘Wasn’t there any spark?’ I enquired. ‘He was an OK sort of personality, but not enough static electricity to spark any ESD.’ (Yeah, she had this bad habit of always showing off that she was better than me when it comes to knowledge in our core engineering subjects. Hmpff!)  And then he never bothered her for the rest of their stay in the college. Except for, may be, a singing performance on stage in their final year where he seemed to have given a soulful rendering of the song, ‘எங்கிருந்தாலும் வாழ்க‌’ (‘Be happy wherever you are!‘). I used to tease her later that he should have been persistent in his efforts, so that then I could have escaped. She would just say “Shuddup” in a sweet sort of way, and hit me gently on whichever body part of mine was closest to her reach.

I had always wanted to meet this fellow, who thought he could spend the rest of his life with this wonderful woman, but as it turned out, I was to be the fortunate one. But certainly not like this during transit at the Frankfurt airport, in a half-sleepy way.

“Isn’t she like a monkey?! Look at him. He hasn’t looked anywhere else for the past ten minutes. I don’t know what he sees in her!!”

I looked at Abi with surprise. “Are you referring to his wife?”

“Yeah, who else?”

“I think she is OK. Good-looking, in fact. She would get 7 upon 10 in the figure-meter I used to have back in college days. That is a pretty good score.”

“Haven’t I warned you not to mention that despicable thing again?? Figure-meter! Who did you think you are, giving scores to girls like that? Indecent bugger!”

“Hey, relax darling. I was an 18-years old adolescent at that time, what else do you expect? And besides, I mentioned about it now only to emphasize my point.”

She responded with three words, one of which started with the sixth alphabet of English.

After some time, she fully turned towards me, and said:

“I’ve always wanted to ask you this, but then.. didn’t.. because of several reasons a porukki like you will never understand. But now I have to. Say, how much will I get in your figure-meter?”

Man, that was a googly and a doosra in the same ball. Be careful, I told myself, in Vadivelu style.

“Er.. have you seen the famous film Narasimha, in which Captain Vijaykanth is given an electric shock? Do you remember what he says? ‘If ordinary people are subjected to current flow, they will get a shock. But if I am subjected to current flow, then current will get a shock.’ But the villain doesn’t listen to him, and tries to give an electric shock. And then the ammeter and the transformer burst into flames.”

“What is your point? Are you comparing me to Vijaykanth? Because if you are, I will kick your backside in his style, right here, right now.”

“No, no, the point is.. this figure-meter cannot be used on you. May be I can calibrate it using you. But if I try to use it for you, it will burst.”

“Are you aware of how silly and stupid you sound? Get lost!”

Phew! That was a close one!

It was at that instance that Shreya woke up. She slipped down smoothly from my lap onto the floor, stood on her legs, and said, “Daddy! I want ice-cream!” 

“No ice-cream till we go home!” said Abi.

“I didn’t ask you. I’m asking daddy.”

Abi gave a look towards my side, accusing me silently that I was spoiling our child. I embraced Shreya quickly, thereby covering her face, and silently pleaded to Abi. She gave up, and said, “OK. I’ll take her.” She stood up, and caught Shreya’s hand and started moving. What she did not perhaps expect was for Raghav to have got distracted by Shreya’s konjals and look towards us. It was his turn to get surprised and try hiding it. I looked on in an amused sort of way.

Abi was undecided for a moment, then looked at me. I could see her hold on Shreya tightening. She came to a quick decision, and turned towards Raghav, and said, “Hi Raghav.”

“Hi Abirami!”

“Nice meeting you. Isn’t it almost six years?! This is my husband Shankar, and my daughter Shreya. Shankar, this is Raghav, my batchmate from engineering.”

“Hey Raghav, Nice to meet you.”

“Me too. This is my wife Shalini. Shalini, this is Abirami from my college.”

I thought he was quite comfortable talking to us. He didn’t have much of the hesitation I expected him to have.

“So what are you doing now, Raghav?”

“Yeah I am leading delivery for a Bank of America project in Chicago. Just relocating there after my recent marriage. Previously I was in Detroit with GM. What about you two?”

“Oh! Congratulations on your marriage, by the way. I manage 4-5 accounts in and around Chicago. Abi doesn’t work any more.”

Shreya wasn’t really impressed with the way we were disturbing her ice-cream time. She started pulling her mother’s sweater.

“Mommy! Ice cream!!”

Abirami smiled at her, and said “Sorry doll! Come let’s go. Excuse us Raghav, Will be back.”

After some time, Raghav and Shalini stood up and came to me. They wanted to go and have something to eat, and could I please look after their bags? Sure, I said. And they went.

When I looked up from my novel few minutes later, Abirami was approaching, carrying Shreya on her back. Shreya was enjoying the ice cream. Why wouldn’t she, when it had that much chocolate cream on it? Shreya doesn’t like to sit down while eating, so she started walking around our seats. Abirami sat near me, and asked:

“Should I have turned my face and walked away, instead of saying Hi?”

“No darling, that would be wrong. He was your friend. I mean, he is your friend. Whatever happened was a minor moment of indiscretion or a honest approach, depending on which way you look at it. I think you did the right thing. If you hadn’t introduced us, I would have waited for you to leave, and then gone to him and said – Just miss!”

She blushed and said, “Rascal.”

They returned. Raghav just gave a nod towards me, acknowledging my help in looking after their bags. He didn’t look at Abirami after that. They went back to their “newly married thing”.

We were asked to proceed towards boarding shortly after that. And we were given preference as passengers with a kid. After take-off, after the security video, and after helping Shreya tune into the Kids films in the in-flight entertainment program, Abi turned to me.

“Looks like he has completely forgotten me, da!”

“!!!!!!”

“He is in love with her now.”

“Yeah, she is his wife, darling. And that is how it is supposed to work, this marriage thing, isn’t it?”

“Yeah.. But.. you know.. uh.. he has completely forgotten me!!”

I looked at her.

“Abi! Are you.. like.. upset that he has moved on with his life?”

She looked flustered and suddenly flared up.

“I am not upset. Why would I be upset? Shuddup!”

A few moments of silence. Then she rested her head on my shoulder, and said:

“Yeah, may be, a little upset.”

I smiled and caught her hand.

“Mmmhmm?”

“It’s a girl thing. You won’t understand.”

I kissed her forehead.

“I know. But I’ll try to understand.”

She didn’t say anything. I continued:

“You didn’t sleep properly from Chennai to Frankfurt. Why don’t you take some rest? I’ll take care of our doll.”

“OK. I love you.”

“Yeah, me too, darling.” 

We completed immigration rather quickly and quietly, and stepped out to the baggage claims area. As we were collecting the baggage, Raghav and Shalini walked by pushing their trolley. I pulled out my card from my wallet and offered it to him.

“It was nice meeting you Raghav. And you too, Shalini. Why don’t you give me a call sometime, and you can visit us for lunch some weekend? Our treat for your marriage.”

“Sure. Thanks. Will do.”

After collecting all five of our bags, I picked up Shreya. She put her hands around my neck, and rested her head on my shoulder. As I started pushing the trolley towards Customs clearance queue, I felt Abi hugging me from behind, and kissing my neck. I felt very connected to both the women of my life.

We moved forward.

Create a free website or blog at WordPress.com.